கடலட்டை பண்ணை:தலையிடி தொடர்கிறது!

 


வடக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வரைமுறையற்ற கடலட்டை பண்ணைகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

உள்ளுர் மீனவர்களது பாரம்பரிய மீன்பிடியை தடுக்கும் வகையிலான சட்டவிரோத கடலட்டை பண்ணைகளிற்கு எதிராக குரல் எழுப்பிவரும் உள்ளுர் மீனவ தலைவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

பெரும் வர்த்தகர்கள் முதலிட்டுள்ள கடலட்டை பண்ணைகளிற்கு பினாமிகளாக உள்ள தரப்புக்கள் அச்சுறுத்தல்களை விடுத்துவருதாக மீனவ பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு விண்ணப்பம் செய்த சிலரே நடைமுறைச் பிரச்சினைகள் காணமாக இதுவரை கிடைக்காத நிலையில் கடற்றொழிலாளர்களின் சமாசங்களின் பெயரால் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.


No comments