ஆபிரிக்காவில் பெரிய தந்தம் கொண்ட யானை இறந்தது


ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானையாக கருதப்படும் கென்யாவில் உள்ள யானையான டிடா வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது நீண்ட தந்தங்களுக்காக புகழ் பெற்றதால் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, கம்பீரமான இந்தப் பெண் யானை வயது 60 முதல் 65 வயது வரையேயான யானையின் சராசரி ஆயுட்காலம் தாண்டி இறந்துள்ளது.

பாதுகாவலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் "சாவோ ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டிடா, கென்யாவின் தென்கிழக்கில் உள்ள பரந்த சாவோ கிழக்கு தேசிய பூங்காவில் வசித்து வசித்து வந்தது. 

 

No comments