யேர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளும் மூன்று தமிழ்ச் சிறுமிகள்!!


1955ஆம் ஆண்டிலிருந்து யேர்மனியில் இடம்பெறும்  யோனெக்ஸ் (Yonex) சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இந்த 2022ஆம் ஆண்டும் முல்கைம் நகரில் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

உலகின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் அந்தந்த நாடுகளின் உயர்திறன் போட்டியாளர்கள் பங்குகொள்ளும் சர்வதேச மட்டத்திலான இந்தச் சுற்றின் 15 வயதுக்கு உட்பட்ட அணியில் இம்முறை மூன்று தமிழ்ச் சிறுமிகள் கலந்துகொள்ளத் தகுதிபெற்றுள்ளனர்.

எமது தாயகத்தின் சார்பில் பங்குகொள்ள முடியாத போதிலும் நாம் வாழும் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து லாவண்யா கிருசாந்தன், யேர்மனியிலிருந்து குயிலினி மார்க்கண்டு மற்றும் சுவிசிலிருந்து கித்திகா வெங்கடசுப்பையா ஆகியோர் இச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர். 

இவர்கள் மூவருமே கடந்த காலங்களில் அந்தந்த நாடுகளில் மாநில, தேசிய மட்டங்களிலே இடம்பெற்ற போட்டிகளிலே முன்னணி நிலைக்குத் தங்களைத் தரமுயர்த்தியதே சர்வதேசப்போட்டிக்கு இவர்கள் தெரிவாகியுள்ளமைக்குக் காரணமாகும். 

அதிலும் இவர்களிலே வயதில் மிக இளையவரான கித்திகா வெங்கடசுப்பையா தனது 13 வயதினரிடையே சுவிஸில் தேசியமட்டத்திலே முதலாவது இடத்தைப் பெற்று 15 வயதுக்குட்பட்ட இற்குத் தகுதிபெற்றுள்ளார். இந்த இளம்வயதிலேயே எம்மைத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலே அடையாளப்படுத்திப் பெருமை சேர்க்கும் கித்திகா, குயிலினி, லாவண்யா ஆகியோரை தமிழினம் நன்றியோடு வாழ்த்திநிற்கிறது.

No comments