மோசடியில் பங்கில்லை:ராஜபக்ச அன் கோ!

ராஜபக்சக்களது மோசடிகள் தொடர்ந்தும் அம்பலமாகிவருகின்ற நிலையில் கொழும்பு, உலக வர்த்தக மையத்தில், ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்தி, பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்று ராஜபக்ச தரப்பினர் அறிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த செய்தியும் அதனுடன் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களும் ஆதாரமற்றவை என்று ராஜபக்ச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

No comments