வடக்கில் மின்னல் தாக்கி இருவர் பலி!வவுனியா - மாமடுப்பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குசென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்

இதனிடையே வியாழக்கிழமை யாழ். தெல்லிப்பளை, அம்பனை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அம்பனையிலுள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இளைஞர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார். 

No comments