பிரித்தானியாவில் குளிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!!


இங்கிலாந்தை மிரட்டும் மின்வெட்டு இங்கிலாந்தில் எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியான நிலையை எட்டும்பொழுது, நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  

உக்ரைன் - ரஷ்யா இடையிலால போரின் காரணமாக இங்கிலாந்தில் எரிவாயு நெருக்கடி ஏற்படும் போது இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில் 3 மணி நேரம் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  எனவே வீட்டில் அதிகம் மின்சாரம் இழுக்கக்கூடிய மின்சாதனங்களை மக்கள் காலை நேரங்களில் பயன்படுத்தாமல் இரவு நேரங்களில் பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதிகரித்துவரும் மின்கட்டணங்களை சமாளிப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும்   மானியம் வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு வழங்குகிறது.  இங்கிலாந்தில் முன்பு இருந்த பொருளாதார சூழலை எட்டிப்பிடிக்க 2024 ஆம் ஆண்டு வரை ஆகும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

No comments