தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு: பழ. நெடுமாறன் கடும் கண்டனம்!


வேலியே பயிரை மேய்வதா? தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துவிட்டுக் கரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவர் படையின் மீது இந்தியக் கடற்படை சுட்டதின் விளைவாக வீரவேல் என்னும் மீனவரின் உடலில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிங்கள கடற்படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமைப் படைத்த இந்தியக் கடற்படையே நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

‘வேலியே பயிரை மேய்ந்தது’ போன்ற இந்தக் கொடூர நிகழ்ச்சிக்குக் காரணமான கடற்படையினர்  மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)
தலைவர்.

No comments