கக்கடதீவிலிருந்து :400 ஜெலினைற்!
யாழ்ப்பாணத்தின் பருத்தித்தீவில் சர்ச்சைக்குரிய நபர்களது நடமாட்டம் பற்றி செய்திகள் கசிந்துள்ள நிலையில் மற்றொரு தீவான கக்கடதீவிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவிற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டுள்ளனர்.
அவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஊர்காவல்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கக்கடை தீவிலும் மனிதர்கள் வாழ்வதில்லை.ஆயினும் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ள தீவகத்திற்கு செல்வதாக கூறப்படுகின்றது.
எனினும் வெடிமருந்துக்கள் யாரால் எடுத்து வரப்பட்டதென்பது பற்றியோ எதற்கு எடுத்துவரப்பட்டதென்பது பற்றியோ தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.
Post a Comment