இந்திய இராணுவ படுகொலை நினைவேந்தல்!
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987 ம் ஆண்டில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அரங்கேற்றப்பட்ட படுகொலை நினைவு கூரப்பட்டுள்ளது.
யாழ்.போதனாவைத்தியசாலைக்குள் அத்துமீறி உட்புகுந்த இந்தியா இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினமே இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலையின் கொடூர சம்பவத்தின் நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
Post a Comment