பழமை வாய்ந்த மரம் முறிந்து வீழ்ந்தது
நேற்று இரவு முதல் கடும்காற்றுடன் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் வீதிக்கு குறுக்கே, பல்லாண்டு பழமை
வாய்ந்த அரசமரம் முறிந்து விழுந்துள்ளது. அதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.இந்நிலையில் குறித்த மரமானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் வெட்டி அகற்றப்பட்டது. (க)
Post a Comment