மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக போரிஸ் ஜோன்சன் முடிவு


இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான அவர் கோவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகப் புகார் வந்ததையடுத்து பதவி விலகி அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் மூன்று மாதங்களில் இங்கிலாந்து தனது இரண்டு பிரதமர்களை மாற்றி மூன்றாவது பிரதமர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் பிரதமர் பதவிக்கான முன்வரிசைப் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments