மக்கள் எழுச்சியே தீர்வு:வேலன் சுவாமிகள்!மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள்  வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்இந்திய இலங்கை கூட்டு சதி மூலம் கொல்லப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12. பேரின் நினைவேந்தலில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறை குமரப்பா புலேந்திரன் உட்பட்டவர்களின் நினைவாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தலமையில் ஈகைச்சுடர் ஏற்றப்படவடு  மௌன வணக்கம், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். அவர் மேலும் தெரிவித்டாவது.குமரப்பா  புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளை  எம் மனதில்  நிறுத்தி இன்றைய நாள் தளபதிகள் குமரப்பா புலேந்திரன் உட்பட்ட 12 வீர வேங்கைகள் தங்களுடைய இன்னுயிர்களை எங்களுடைய  இனத்தினுடைய விடுதலைக்காகவும்,  சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனிநாட்டிலே  நாங்கள் வாழ்வதற்க்காகவும்,  அற்பணித்த நாளினுடைய முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் தமிழர்களாகிய எங்களுடைய விடுதலைப் போராட்டம் அரசியல் ரீதியில் பல வேண்டுகோள்களை முன்வைத்த 30 வருடங்களாக நடைபெற்று சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையிலே பயணித்த பயணம் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலே  இனி தமிழர்களுக்கு தங்களுக்கு என்று ஒரு தனியான நாடு தமிழீழம் அமைவதுதான் ஒரே தீர்வு என்ற தீர்மானம் எட்டப்பட்டு தொடர்ந்து அடுத்த வருடம் நடைபெற்ற தேர்தலிலே மக்கள் அனைவரும் தனித் தமிழீழத்திற்க்கான மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள்.

 அதனை தொடர்ந்து  நடைபெற்றிருக்கக்கூடிய விடுதலைப் போராட்டம் தனிநாட்டு தனிநாட்டுக்கான போராட்டம்.

அதிலே ஒரு முக்கிய அம்சமாக இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்று சொல்லப்படுகின்ற ஒப்பந்தம் நடைபெற்றது.

அந்த ஒப்பந்தத்தை மீறக் கூடிய விதத்திலே  இந்திய அமைதிகாக்கும் படைகள் எங்களுடைய தாயகத்தில் வந்து  செய்திருக்கக்கூடிய அநியாயங்கள்,  அட்டூழியங்கள்,  இதற்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக தளபதிகள் குமரப்பா புலேந்திரன் அவர்கள் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்த  இந்த சம்பவம் அமைந்திருக்கிறது.

இதன் அடிப்படையில்தான் மீண்டும் அந்த யுத்தம் ஆரம்பித்து 2009-இல் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையிலே இன்று  ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும்  எங்களுக்காக எங்களுடைய மண்ணினுடைய விடுதலைக்காக,  எங்களுடைய இனத்தினுடைய இனத்தினுடைய உரிமைகளை பெற்றுக் கொண்டவர்களுக்காக நடைபெறுகின்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிலே  மக்கள் எழுச்சியாக அணிதிரண்டு பங்கு பற்ற வேண்டும்.

 மக்கள் புரட்சியின் ஊடாகத்தான் நாங்கள் எங்களுடைய விடுதலையை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதனூடாக எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைத்தான்  நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அந்த ஒரு அடிப்படையிலேயே எங்களுடைய மாவீரர்களுடைய தியாகங்கள் அவர்களுடைய அர்ப்பணிப்புகள் அது  எங்களுடைய உறவுகள் அனைவரும் அறிந்ததே.

ஆகவே எங்களுடைய மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள் முழுமையாக அடைய முடியும்.

 ஐக்கிய நாடுகள் சபையினுடைய  மனித உரிமைகள் பேரவை  இன்று கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு தீர்மானம்  அல்லது கொண்டு வர இருக்கின்ற ஒரு தீர்மானம்

 எங்களுக்கான ஒரு தீர்வினை அல்லது எங்களுக்கான ஒரு அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற விதத்திலும் அமையவில்லை.

ஆகவே நாங்கள் எல்லாத் தளங்களிலும்,  எல்லாத் தரப்பு களிலும், போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும் எப்பொழுது எங்களுடைய மக்கள் எழுச்சியாக அணி திரள்வார்களோ அப்பொழுதுதான் எங்களுடைய விடுதலை சாத்தியமாகும் என்பதை சொல்லிக்கொண்டு அனைத்து நினைவேந்தல்களையும்  எங்களுடைய. உறவுகள் அனைவரும் தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும்.

அதனூடாக ஏற்படுகின்ற மக்கள் எழுச்சியின் மூலமாக  எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு அமையவேண்டும் என்ற செய்தியை இந்த நேரத்தில் சொல்லி நிற்கிறோம் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்

No comments