யாழ்.பேரூந்து நிலையத்தில் பெண்ணின் உடலம்!

 


யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சுமார் 60 வயது மிக்க கருப்பு நிறமுடைய பெண் மஞ்சள் நிற சட்டையும் நீல நிற பாவாடையும் பச்சை மற்றும் வெள்ளை நிறமுடைய சேலையும் அணிந்த்திருந்ததாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் விடுத்துள்ள வேண்டுகோள்.

குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments