தேச விடுதலையை அங்கீரிப்பது தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் அறிவினை பயன்படுத்தி உழைக்க வேண்டும்


வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேசவிடுதலையை அங்கீகரிப்பது, தேசவிடுதலைக்கான தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் சார்பாக தத்தமது அறிவினையும் எதிர்காலத்தில் ஆயுதமாக பயன்படுத்தி உழைக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மறைந்த சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நேற்று யாழிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் நினைவுரையினை நிகழ்த்துகையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிக்கு முரணான முறையிலும் தெரிவு செய்யப்பட்டு, மிக கொடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுடிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளின் விடுதலைக்காக கௌரி சங்கரி அவர்கள் அர்ப்பணிப்புடன், ஒரு தாய் உள்ளத்தோடு அவர்களின் விடுதலைக்கான அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற உரிமைப் போராட்டத்தினை மிக ஆழமாக நேசித்தார். கொடிய பயங்காரவாதத்தின் மூலம் பெரும்பாண்மையின சட்டத்தரணிகள் இவர்களை பயங்காரவாதிகளாக பார்த்தார்கள்.

அவர் தேசவிடுதலையினை நேசித்தார். தேசவிடுதலை என்பது, ஒற்றை ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 87 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை ஏற்க மறுக்கப்பட்ட போராட்டம். அதனால் பயங்காரவாத தடைச்சட்டத்தினால் ஒடுக்குமுறைகளை இளைஞர் யுவதிகளின் மீது பிரியோகிக்கப்படும் போது அதற்காக மிக தீவிரமாக குரல் கொடுத்தவர்.

தேசவிடுதலையை அங்கீகரிப்பது தேசவிடுதலைக்கான இந்த தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் சார்பாக தத்தமது அறிவினையும் ஆயுதமாக பயன்படுத்தி உழைக்கவேண்டும். அதனால் படைக்கப்படுகின்ற சாதனைகள் தான் மறைந்த கௌரி சங்கரி அம்மாவுக்கு செய்கின்ற நன்றியாக இருக்கும் என்றார்.

புலம்பெயர்ந்த தேசம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்விலே நாங்கள் உரையாற்றி இருந்தோம் நாட்டின் பிரிவினையை வலியுறுத்தி  எங்கள் மீது வழக்கு கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களிலே தேசம் முறமை தேசம் அங்கீகரித்தல் தேசிய உரிமை அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றோம் என்று பேசினோம். அதன் மூலம் அவ்வழக்கு நீக்கப்பட்டது  என்றார்.  

செய்தி -பு.கஜிந்தன்

No comments