மாதகலில் மரத்திலிருந்து விழுந்தில் ஒருவர் பலி!


யாழ்ப்பாணம் - இளவாலை பிரதான வீதி, மாதகல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சம்பவத்தில், பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments