செல்வம், சுரேன், அலி சப்ரி: ஜெனீவா பயணம்!


ரணிலுடனான சந்திப்பினையடுத்து ஜநாவிற்கு அவசரமாக பறக்க செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் தயாராகின்றனர்.

இதனிடையே அரச தரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் தனித்தா அல்லது சேர்ந்த பயணம் அமையுமென்பது தெரியவரவில்லை. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments