உணவு விலை குறைக்க முடியாது?இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க எமக்கு முடியும். அவ்வாறு செய்தால், எரிவாயு விலை குறைக்கப்பட்டு மறுபுறத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கிறது.  எனவே, உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவும் முடியாமல், குறைக்கவும் முடியாமல் பாரிய பிரச்சினை ஏற்படுகிறது.

மரக்கறி ரொட்டி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை ரொட்டி, பராட்டா என்பனவும் 10, 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால், எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் இணங்க தாங்கள் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments