மானிப்பாயில் தாக்குதல்: வீடு தேசம்: உந்துருளி எரிந்து நாசம்!


யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை  தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அங்கிருந்த உந்துருளியையும் தீயிடப்பட்டது.

வீட்டிலிருந்தோர் தூக்கத்தில் இருந்தவேளை, அதிகாலையில் வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் யன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற உந்துருளிக்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. உந்துருளி முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் காவல்துறையினர் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments