காசு வாங்கிய கறுப்பாடுகள்:சுமா கொதிப்பு!


ஜனாதிபதி தெரிவின் போது பணம் வாங்கியது உண்மையென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் கறுப்பு ஆடுகள் உள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் நல்லாட்சி காலத்தில் அவரின் ஊடாகவே கொடுக்கல் வாங்கல்களை ரணில் முன்னெடுத்திருந்தார்.

ஆனால் இம்முறை நேரடியாக பங்காளிகள் டீல் முடித்தமை தான் எம்.ஏ.சுமந்திரனால் ஏற்கமுடியாத விடயமாக உள்ளதாக உள்ளக தரப்புக்கள் கூறுகின்றன.

ஏம்.ஏ.சுமந்திரனின் அரசியல் சாணாக்கியம்; தன்மேல் குற்றத்தை சுமத்த யார்.எத்தனித்தார்களோ அவர்களுக்கே அவர்கள் கூறியதை நாசூக்காகவும் பண்போடும் "கறுத்த ஆடுகள்" இருக்கின்றனர் என்பதை நிறுவுகிறார் என ஆதரவாளர்கள் புல்லரிக்க தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி தெரிவின் போது ரணிலுடன் பங்காளிகளில் ஒரு தரப்பு முன்னைய முகவர் ஊடாக நேரடியாக டீலை முடித்தமை உறுதியாகியுள்ளது.

கைமாறிய தொகை தொடர்பில் கட்சி வட்டாரங்களில் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் தோன்றியுள்ளது. 


No comments