உள்ளுராட்சி தரப்புக்கு மேலுமோரு வருடம் புனர்வாழ்வு!



இலங்கையில் உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் விரும்பினால் தற்போதுள்ள உள்ளூராட்சி சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்றார்.


இது தொடர்பில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கருத்து கூறுகையில்,, ​​உள்ளூராட்சி அமைச்சரினால் தேர்தலை ஒரு தடவை மாத்திரமே ஒத்திவைக்க முடியும் என்பதால் தற்போதுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து தேர்தலை மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்.


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக பவ்ரல் அமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments