ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!


இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் இன்று புதன்கிமை (13) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு ஒளிபரப்பை இடை நிறுத்தி தமது போராட்டத்தின் குறிக்கோளை நேரலையாக தெரிவித்தனர்.

வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் குழு ஒன்று, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கோரியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைவார்கள் என்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் நூற்றுக்கணக்கான படையினர் காவலில் ஈடுபட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments