போராட்டகாரர்கள் பலியாடு ஆகின்றனரா? இலங்கை நாடாளுமன்ழற கைப்பற்ற நகரும் போராட்டகாரர்கள் சுற்றி வளைக்கப்பட்டு மோசமான முறையில், தாக்கப்பட்டுவருகின்றனர்.அதிலும் பெண்கள் தாக்கப்பட்டுவருதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பாராளுமன்றத்தின் மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றும்,பாராளுமன்றம் மற்றும் சபாநாயகர் மாளிகையை முற்றுகையிடுவதை தவிர்க்குமாறும் போராட்ட இளைஞர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தலைவர் என்று அழைக்கப்படுபவர்களிடம் ஏமாற வேண்டாம் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

அதேவேளை மாலை 6 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்த போது கோதாபய ராஜபக்ச மாலே-சிங்கப்பூர் விமானத்தில் ஆகாயத்தில் இருந்தாராம். ராஜினாமா கடிதத்தை "டைப்" செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம் என நையாண்டி செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.


No comments