அடுத்து பாராளுமன்றம்:ஆமி சுடாது?

 


இலங்கை பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றத் தகவல்களை அடுத்து, பாராளுமன்றத்துக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்துவ சந்தியில் வைத்து தடுத்த பொலிஸாரும் படையினரும் அவர்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீச்சிய​டித்தும் கலைத்துள்ளனர்.

இதனிடையே நிராயுதபாணிகளாக இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது தொடர்பில் இராணுவ வீரர்கள் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என தான் இராணுவத்தினருக்கு கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பழைய தளபாடங்கள் பழைய கட்டடங்கள் சேதமாக்கப்படுவதாக யாரும் கவலைப்பட வேண்டாம். போராட்டக்காரர்கள் இந்த சொத்துக்களை விட மேலான ஒன்றை வெற்றிக்கொள்ள போகிறார்கள். பதில் ஜனாதிபதியாக தன்னைத் தானே தெரிவு செய்து கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கம்வால் பிறப்பிக்கப்படும் எந்தவொரு சட்டவிரோத உத்தரவுகளையும் பாதுகாப்பு தரப்பினர் பின்பற்றக் கூடாது எனவும் தெரிவித்தார்.

No comments