கோத்தா தப்பிக்க கடலே மிச்சம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்துள்ளனர்.

இனிமேல் கோத்தபாய ஜனாதிபதி மாளிகைலிருந்து வெளியேறவேண்டுமெனில்  கடல்வழியாகவே செல்லவேண்டும்.

No comments