இலங்கை: எதிர்கட்சிகள் வீதிக்கு !இலங்கையின் நிலை மிக மோசமடைய தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் வீதிக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன.

மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் ராஜித சேனாரத்ன மேற்குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்தாலோசித்து, வெகு விரைவில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று (20) விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments