மாதம் 5 கோடியை அள்ளிவீசுகிறாராம் அமைச்சர்!இலங்கையின்  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து மாதாந்தம் 50 மில்லியன் ரூபாவை அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக ஒதுக்கியதாக கூறுகிறார்.

“ஒரு விஷயம் இருக்கு, விலை மனு கோரி வேலை செய்தால் அதிக நாளாகும். அதனால்தான் எனது தனிப்பட்ட பணத்தில் மாதம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்வேன் என்று கருதி நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதனால் அந்த மாதிரியான பணத்தை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அப்படியொரு பட்ஜெட்டை எனக்காக ஒதுக்கிவிட்டு இந்த நாற்காலியில் அமர்ந்தேன். அரசுப் பணத்தின் மீது நம்பிக்கை வைத்து அல்ல. ஒரு மாதத்திற்கு 50 மில்லியன் எனது தனிப்பட்ட சொத்துக்களை மக்களுக்காக செலவிடுகிறேன். தம்மிக்க பெரேரா டெண்டர் கேட்டு மூன்று மாதங்கள் காத்திருக்கக்கூடியவர் இல்லை.

எனவே நான் எல்லாவற்றையும் தயார் செய்து இந்த நாற்காலியில் அமர்ந்தேன்

No comments