யாழ்ப்பாணத்தவர்களை நாடு கடத்தும் தம்மிக்க?
 

தனது சொந்தப்பணத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் புதிய அமைச்சர் தம்மிக்க.

கடவுச்சீட்டு மட்டும் போதாது ஜரோப்பிய நாடுகளிற்கு அனுப்பியும் உதவுங்கள் என கோரி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதனிடையே அண்மையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்ற பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் அவரது அமைச்சின் கீழ் வருவதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன

No comments