கச்சதீவு:அலட்ட தேவையில்லை!

 தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை கச்சத்தீவை இந்தியாவுக்கு மீளளிக்கும்; எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிககையொன்றை விடுத்துள்ளார்.

இதனிடையே அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது. எனவே இதனை பிரச்சனையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

கச்சதீவினை இலங்கை அரசாங்கம் கொடுக்கும் எனில், அதற்கு தமிழ் மக்களுடைய ஒப்புதல் குறித்து பேச வேண்டும். ஆகவே இதற்கான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.

இந்த விடயமானது ஊடகங்களின் பேசுபொருளாக காணப்படுறதே தவிர, இரு அரசாங்கமும் இது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும். எனவே எடுகோள்களை ஒரு பிரச்சனையாக எடுக்க வேண்டாம், அப்படியாக இருக்கட்டும் 

இது தொடர்பாக டெல்லி அரசாங்கம் எதுவும் பேசவில்லை. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைவர் என்பதை தவிர அவருக்கு அதிகாரம் இருப்பதாக நான் அறியவில்லை என்றார்

No comments