பணத்தை வெள்ளையாக்கிய ஒரு குடும்பத்தை 10 பேர் கைது!


சர்வதேச போதைப்பொருள் கடத்தலிலிருந்து கிடைக்கும் பணத்தைச் வெள்ளையாக்கிய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளதாக நெதர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமில் வீட்டுத் தளபாடங்கள் மற்றும் மகிழுந்துகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.4 மில்லியன் யூரோக்களை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பதினைந்து இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் ஏப்ரல் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் பணம் மற்றும் பிட்காயின் மீதான பல ஆண்டு விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் வந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments