நானே போரை தொடங்கினேன்: சரத் பொன்சேகா

கோத்தபாய பின்னடித்த போதும் தானே யுத்தத்தை ஆரம்பித்து வழிநடத்தியதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமானது. நான் சிங்கப்பூரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மாவில் ஆறை மூடினர்; .இந்தச் செய்தியை அறிந்தவுடன் நான் இலங்கை திரும்பினேன். அப்போதும் நான் குணமடைந்து கொண்டிருந்தேன். மாவில் ஆறு மூடப்பட்ட போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அணைக்கட்டை விடுவிக்குமாறு ராஜபக்சக்களிடம் கோரினார். 

பதில் இராணுவத் தளபதியாக நந்த மல்லவாராச்சி நியமிக்கப்பட்டார். அவர் இராணுவத்தில் இருந்தபோது தற்போதைய ஜனாதிபதியின் சிறந்த நண்பராக இருந்தார். ஆற்றை மீட்க இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமா? என ராஜபக்சக்கள் அவரிடம் வினவியபோது, தன்னிடம் போதிய படைகள் இல்லை எனக் கூறி மறுத்துவிட்டார். 

அப்போது மகிந்த ராஜபக்சவுக்கு போரை தொடங்கும் எண்ணம் இல்லை. நான் இலங்கைக்கு திரும்பி கோட்டாபய மற்றும் கிழக்கு கட்டளை அதிகாரியுடன் பேசினேன். நான் மீண்டும் கோத்தபாயவைத் தொடர்பு கொண்டு மாவில் ஆற்றைக்காப்பாற்றப் போராடுவோம் என்று தெரிவித்தேன். ராஜபக்சேக்கள் ஒப்புக்கொண்டார்கள், அப்படித்தான் போர் தொடங்கியது. எந்த நேரத்திலும் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. எனது நோக்கத்தைத் தொடர்ந்து போர் தொடங்கியதெனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


No comments