மகிந்தவிற்கு பெரும்பான்மையென்கிறார் கோத்தா!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததுடன், இருவரும் தொடர வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.

109 பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌதீக ரீதியாக பிரசன்னமாகியிருந்த அதேவேளை 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நியமனங்கள் காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தனர் மற்றும் தற்போதைய நெருக்கடி மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து விவாதித்தனர்.

தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு தெளிவான தேசிய நிகழ்ச்சி நிரலுடன் புதிய கூட்டணி அரசாங்கத்தை பாராளுமன்றம் அமைக்க வேண்டும் எனவும் பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதிய டலஸ் அலகப்பெருமவும் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டுபவர்களுக்கு அரசாங்கத்தை தொடர அனுமதிப்பதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தாம் கோரவில்லை எனவும், மஹிந்த பிரதமராக நீடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments