ரஷ்ய எல்லைக்கு ஊடுருவிய உக்ரைனியப் படையினர் ஐவர் சுட்டுக்கொலை!!


உக்ரைனிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய 5 உக்ரேனியப் படையினரைக் சுட்டுக்கொன்றுள்ளதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு இன்று திங்கட்கிழமை கூறும்போது:-

உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்கு எல்லை தாண்டி நுழைந்த உக்ரைனியப் படைகள் ரஷ்யாவின் வேவுக் குழு தடுத்ததாகவும் இச்சம்பவத்தில் ஐந்து உக்கரைன் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தென்மேற்கு ரோஸ்டோவ் பகுதியில் உள்ள மித்யாகின்ஸ்காயா கிராமத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி 6:00 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

இக்குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. இது போலிச் செய்தி என்று நிராகரித்துள்ளது உக்ரைன்.

உக்ரைனின் உள்துறை அமைச்சக அதிகாரி அன்டன் ஜெராஷ்சென்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் வீரர்கள் ஒருவர் கூட ரஷ்ய கூட்டமைப்பின் எல்லையை கடக்கவில்லை, இன்று ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்றார்.

இத்தாக்குதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments