உக்ரைன் எறிகணை வீச்சு! காவலரண் அழிந்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு!


இதேநேரம் உக்ரைனில் இருந்து வந்த எறிகணை ரஷ்யாவின் எல்லைக் காவல் நிலையத்தை அழித்ததாக ரஷ்யா எப்.எஸ்.பி பாதுகாப்பச் சேவை கூறியிருக்கிறது.

இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் உக்ரைன் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட எறிகணை ரஷ்யாவின் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள காவலரணை நிலையத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. எனினும் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் அந்த நேரம் அந்த இடத்தில் இரண்டு இராணுவ பொறியிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று ரஷ்யா எப்.எஸ்.பி பாதுகாப்பச் சேவை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தை உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. 

No comments