உக்ரேனிய பிரிவினைவாத பகுதிகளை அங்கீகரிக்கும் முயற்சியில் புடின்


கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பிராந்தியங்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது குறித்து ரஷ்யா இன்று முடிவு செய்யும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் பல ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களால் போராடிவருகின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் போர் நிறுத்த மீறல்கள் நடந்து வருகின்றன.

இரு பிராந்தியங்களின் தலைவர்களும் இன்று திங்களன்று தங்கள் சுதந்திரத்தை அங்கீகரிக்குமாறு ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மேற்கத்திய சக்திகள் அத்தகைய நடவடிக்கை ரஷ்யாவின் அண்டை நாடு மீது படையெடுப்பதற்கு ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகிறது.

2019 முதல் ரஷ்யா இரண்டு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளது.

இரண்டு பிராந்தியங்களும் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட்டால், ரஷ்யா தனது குடிமக்களைப் பாதுகாக்கும் போர்வையில் உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு படைகளை அனுப்பக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

150,000 க்கும் மேற்பட்ட ரஷ்யப் படையினர் உக்ரைனின் எல்லையைச் சுற்றிவளைத்துள்ளனர். இது ஒரு உடனடி படையெடுப்புக்கான தயாரிப்பாக மேற்கத்திய நாடுகளால் பரவலாகக் கருதப்படுகிறது. ரஷ்யா அத்தகைய திட்டங்களை மறுக்கிறது.

இன்று திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தொலைக்காட்சி கூட்டத்தில், பிரிந்து சென்ற இரு பகுதிகளையும் மாநிலங்களாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிப்பதாகக் புடின் கூறினார்.

இன்றைய சந்திப்பின் நோக்கம் சக ஊழியர்களின் கருத்தைக் கேட்டு, இந்தப் பகுதியில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாகும் என்று திரு புடின் கூறினார்.

டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர்கள் தங்கள் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று புடின் தெரிவித்தார்.

பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பல அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக பேசினர். மேலும் ரஷ்ய பாராளுமன்றம் ஏற்கனவ சுதந்திரத்தை அங்கீகரிக்குமாறு புடினைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதி தனது இறுதி முடிவை குறிப்பிடவில்லை, இது திங்கட்கிழமை பிற்பகுதியில் எடுக்கப்படும் என்று கூறினார்.

No comments