உக்ரைனில் சுதந்திரம் கோரும் இரு தேசங்களையும் அங்கீகரித்தார் புடின்!!


கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளின் சுதந்திரத்தை புடின் அங்கீகரிப்பதார் என கிரெம்ளின் கூறியது.

உக்ரைனிலிருந்து பிரிந்து சென்ற இரு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள பிரிவினைவாத பகுதிகளை அங்கீகரிக்க வேண்டாம் என்று மேற்கு நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ள நிலையில் இரண்டு பகுதிகளையும் சுதந்திரமான நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அத்துடன் ரஷ்ஷ பாராளுமன்றம் விரைவில் முடிவெடுக்கும்படி கேண்டுக்கொண்டார்.

உக்ரைனுக்கு உண்மையான தேசம் என்ற வரலாறு இல்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. நவீன உக்ரைன் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என புடினின் நீண்ட உரையில் குறிப்பிட்டார். நேட்டோ கூட்டணியில் உக்ரைன் சேரும் யோசனையை அவர் கடுமையாக தாக்கினார். அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தல் என்றார். உக்ரைன் அமெரிக்காவின் பொம்மை என்றும், உக்ரேனிய அதிகாரிகள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். ரஷ்ய பாதுகாப்பு கவலைகளை நேட்டோ புறக்கணித்ததாக புடின் தனது வாதத்தை மீண்டும் கூறினார். நேட்டோவில் உக்ரைன் நுழைவது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை எதிர்ப்பாளர்கள் வீழ்த்திய 2014 நிகழ்வுகளை அவர் சதிப்புரட்சி என்று அழைத்தார். உக்ரைன் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது. உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக விளாடிமிர் புடின் கூறுகிறார்.

இரு மாநிலங்களின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திய அவர், இது நீண்ட காலத்திற்கு முன்பே தான் எடுத்திருக்க வேண்டிய முடிவு என்றார். எனக்கு ரஷ்ய மக்களின் ஆதரவு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று புடின் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டை ஒரு மோசடி மற்றும் ஊழல் என்று உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இது டொன்பாஸில் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த 2015 அமைதி உடன்படிக்கையை மீறி உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே மேலும் பதட்டங்களை மேலும் தூண்டியது.

ரஷ்யா இரு பகுதிகளையும் தன்னுடன் இணைத்தால் நிட்சயமாக பொருளாதாரத் தடைகள் போடப்படும். 

ரஷ்யா பிரிவினை வாதத்தை அக்கீகரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைகளை முன்வைப்பேன் என்று  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் ஜோசப் பொரெல் கூறினார்.  

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் கிரெம்ளினில் இருந்து வரும் செய்திகளை அடுத்து தங்கள் நாடுகளின் அவசர பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு அழைப்பு விடுத்தனர்.

No comments