800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு - ரஷ்யா அறிவிப்பு


800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யா இதுவரை 800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்களின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது என்று மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

14 இராணுவ விமானநிலையங்கள், 19 கட்டளை நிலையங்கள், 24 S-300 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் 48 ரேடார் நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார். மேலும், எட்டு உக்ரைன் கடற்படை படகுகள் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

No comments