3 ஆம் நாள் உக்ரைன் யுத்தம்!! தலைநகர் வீதிகளில் மோதல்




ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியிலும் உன்ரைன் தலைநகரில் மக்கள் நேற்றிரவு முழுவதும் நிலக்கீழ் அறைகளிலும், நிலக்கீழ் தொடருந்து நிலையங்களிலும் நீண்ட இரவைக் கழித்தனர்.

தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயன்றபோது அங்காங்கே சண்டைகள் நடந்தன.

இன்று அதிகாலை மேற்கில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் ரஷ்யத் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கியேவின் தெற்கே உள்ள விமான நிலையத்தில் வான்வழித் துருப்புக்களை தரையிறக்க ரஷ்ய முயற்சியைத் முறியடித்தாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

துருப்புக்களை ஏற்றிவந்த ஒரு பெரிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறுகிறது.

ஏனைய இடங்களில், ரஷ்ய துருப்புக்கள் மற்றும் கவசங்கள் பல வழிகளில் மெதுவாக முன்னேறி வருகின்றன.

உக்ரைனின் நகரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைகளில் இருப்பதாக உக்ரைன் கூறுகிறது.

ஆனால் நேற்று வெள்ளிக்கிழம மரியுபோல் துறைமுக நகருக்கு மேற்கே ரஷ்ய கடற்படையின் தரையிறக்கம் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் வைத்திருக்கும் பகுதியுடன் இணைக்க மொஸ்கோ உறுதியாக இருப்பதாக பரிந்துரைத்தது.

No comments