மின்கட்டணமும் ஏறுகின்றது!

 


இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை,  அரசாங்கத்திடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

2014ஆம் ஆண்டின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டு மின் கட்டணம் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார். 

இது தொடர்பில் மக்களின் கருத்துகளை சேகரித்து சகல தரப்பினரிதும் நிலைப்பாடு களைப் பெற்றுக்கொள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் மின் கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது நிவாரணம் வழங்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் யோசனை கோரவுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தீர்மானத்துக்கமைய இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார்

No comments