சிதம்பரம், பிரணாப்பை நம்பி கலைஞர் ஏமாற்றமடைந்தார்!



இறுதி யுத்த காலத்தில் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றோர் சொல்லியவற்றை நம்பியே கருணாநிதி ஏமாற்றப்பட்டதாக அவரது செயலாளரான சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியுடனான தனது பணிகள் பற்றி குறிப்பிடுகையில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும், இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப்போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார்.

 ‘இல்லை; இப்போ பதவியிலேயும் கூட்டணியிலேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆள் இல்லாமப் போய்டும்’னு சொல்லி பலர் அதைத் தடுத்தாங்க. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டு பேரும் உறுதியா பேசுனதாலதான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனா, எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையும் பார்த்தப்போ துடிச்சுப் போனார். பிரபாகரன் பிரிவு செய்தி வந்த அன்னிக்கெல்லாம் உடைஞ்சுட்டார் என சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் செயலாளரான சண்முகநாதன் மாரடைப்பினால் நேற்று மரணமடைந்துள்ளார்.


No comments