அடிபிடியில் ஆளும் தரப்பு!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் அலுவலம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் இணைப்புச் செயலாளர் பாபிக் தெரிவித்துள்ளார்.

 இந்த சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதோடு, அலுவலகத்தின் சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இன்று நண்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments