வவுனியா வடக்கும் கவிழ்ந்தது!ஒரு பக்கம் 13வது திருத்தத்திற்காக பஸில் ராஜபக்ச டீலை கொழும்பு ஹோட்டல்களில் முன்னெத்தவாறு மறுபுறம் பங்காளிகளை கவிழ்த்து வீழ்த்துவதில் முனைப்பாக உள்ளன தமிழ் கட்சிகள்.

நேற்றைய தினம் காரைநகர் பிரதேசசபையை கவிழ்த்த தரப்புக்கள் இன்று வுனியா வடக்கு பிரதேச சபையை கவிழ்த்துள்ளன.

இதுவரை காலமும் கூட்டமைப்பின் வசமிருந்த பிரதேசசபையை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது.அதன் பிரகாரம் த. பார்த்தீபன் தவிசாளராகியுள்ளார்.

எமது அரசியல் இயக்கத்தின் தலைமையின் ஆழமான, தேசியம்சார் சிந்தனைக்கமைவாக வவுனியா வடக்குப்பிரதேச சபையின் ஆட்சி  பேரினவாதிகளின் கைகளில் சிக்குப்பட்டுவிடக்கூடாது என்ற ஒற்றைக்காரணத்திற்காக புதிய தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்படும் புதிய வேட்பாளரை  ஆதரித்து வாக்களிப்பார்கள் என வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன், அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments