சங்கரிக்கு சோத்துக்கே சிங்கியாம்!
இலங்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மற்றும் தமது மனைவியரது ஓய்வூதியத்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழக்கவுள்ளனர்.
ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
இதனிடையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் தனக்கு கிடைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திலேயே வாழ்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரியின் மகன் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் அவர் தனது சுய உழைப்பில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என நினைக்கிறார்.
தனது முழு நேர நாடாளுமன்ற வாழ்க்கையின் பின்னர் தனக்கு கிடைத்த ஓய்வூதியம் அவருக்கு யாரின் உதவியும் இல்லாமல் வாழ வைத்தது.
சிறு தொகையினர் தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஓய்வூதியம் நீக்கம் செய்வதற்கான முறைமை பிழையானது. கண்மூடித்தனமாக நீக்க எடுத்த தீர்மானம் தவறானது” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Post a Comment