அல்லைப்பிட்டிக்கு விசாரணை தேவை!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் அண்மையில் சிறுவன் ஒருவர் காவல்துறையின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.அதற்கு இது வரையில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.இலங்கை காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தினர்; பாதிக்கப்பட்டுள்ளனர்.படுகொலைக்கு நீதியான தீர்வு அவசியம்” என இலங்கை நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் நீதியான விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசு மௌனம் காண்பித்து வருகின்றது.

Post a Comment