வடக்கு தெற்கில் கிறிஸ்மஸ் பலி இரண்டு!

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பேர்து நடைபெற்ற மோதல்களில் வடக்கிலும் தெற்கிலுமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை கடலில் குளிக்க சென்ற இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது 22) எனும் ,ளைஞனே உயிரிழந்துள்ளார். 


நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று வானில் கௌதாரிமுனை கடற்பகுதிக்கு நேற்றைய தினம் மாலை சுற்றுலா சென்றுள்ளனர். 

அங்கு வேறொரு பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர் குழு ஒன்றுடன் இவர்களுக்கு தர்க்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது ஏற்பட்ட மோதலில் இளைஞன் உயிரிழந்துள்ளார் .


அதேவேளை கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று நடத்தியுள்ள நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments