வடக்கிற்கு பயணிதார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா!வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆளுநராக பொறுப்பேற்ற பின்னராக தனது வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள அவர் இன்று பாலாவியில் நீராடி திருக்கேதீஸ்வரநாதரை வழிபட்டார்.

இதனிடையே நாளை மறுதினம் திங்கட்கிழமை அவர் தனது கடமைகளை யாழ்ப்பாணத்தில் பொறுப்பேற்பார் என சொல்லப்படுகின்றது.


No comments