கொழும்பில் காவல்துறை மீது துரத்தி துரத்தி தாக்குதல்!கொழும்பு  மருதானை, கின்சி வீதியில் பயணித்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை கைது செய்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று (16) காலை முகத்துவாரம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments