கோத்தா குழு:தமிழருக்கு இடமேயில்லை!

 


உரத்தடையால் திணறிக்கொண்டிருக்கின்ற கோத்தா அரசு பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள இச்செயலணியில் தமிழர்கள் எவருமேயில்லையென்பது அம்பலமாகியுள்ளது.

குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக லலித் செனவிரத்ன, கசுன் தாரக அமல், மாலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, கலாநிதி பி.கே.ஜி காவந்திஸ்ஸ, சமந்த பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்தூனு, என்.எம் கலீட், சம்மி கிரிண்தே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கானம்கே மற்றும் நிஷான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments