கொரோனாவை கண்டுகொள்ளாவிடின் தண்டம்!

 


கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அனுமதியின்றி திருமண நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தினருக்கு தண்டப் பணம் அறவிடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் அனுமதியின்றி திருமண நிகழ்வை நடாத்திய குற்றச்சாட்டில் 39 குடுபங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் வழங்கு நேற்று வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட 6 குடும்பங்களுக்கு தலா 2ஆயிரம் ரூபாவும் ஏனைய குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

இதனிடையே சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments