சீனாவா? அமெரிக்காவா? ஊசிக்கணக்கில் போட்டி!சீனா தனது சினோபாம் ஊசிகளை அள்ளி வழங்குகின்ற போதும் இலங்கையில் இளம் தரப்பிடையே அதற்கான வரவேற்பில்லாதே இருந்துவருகின்றது.

எனினும் அமெரிக்க பைசர் தடுப்பூசிகளிற்கு வரவேற்பிருப்பதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் தேடி அலைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்  அமெரிக்கா மேலும்  400 ஆயிரம் பைசர் தடுப்பூசி டோஸ்கள்  இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவை நேற்று வெள்ளி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்த தடுப்பூசிகளை அமெரிக்க தூதுவர்  சுகாதார அமைச்சு குழுவினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதேவேளை, நேற்று காலை 400ஆயிரம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்கா நன்கொடையா வழங்கிய நிலையில்  நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments