முதன் முதலில் விண்வெளியில் படப்பிடிப்பு, புறப்பட்டது படக்குழு

 


சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) படப்பிடிப்பிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி செல்கிறது. படத்தின் பெயர் 'The Challenge'. பெயருக்கு ஏற்ப ரஷ்யாவின் படப்பிடிப்பும் குழுவுக்கு இது சவாலான பணி தான். விண்வெளியில் படபிடிப்பை நடத்தும் உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாறு படைக்கிறது.

விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இதன் படக் கதையாகும். ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Roscosmos ) செவ்வாய்க்கிழமை இந்திய நிலையான நேரப்படி மதியம் 2.25 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஒரு விண்வெளி வீரர், ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகர் ஆகியோரை விண்கலத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக நாசாவும் (NASA)  உறுதிப்படுத்தியுள்ளது.

No comments